N

15.8.11

குஜராத்தை ஆள்வது மோடியா? அல்லது கேடியா!?


அஹ்மதாபாத்:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான மொபைல் ஃபோன் கால் ரிக்கார்ட் செய்த அசல் சி.டியை ஆஜராக்கவில்லை என குற்றம்சாட்டி மோடி அரசு ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குற்றப்பத்திரிகை அளித்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை நகல் ராகுல் சர்மாவுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டதாக மாநில அரசு செய்தித் தொடர்பாளர் ஜெயநாராயண் வியாஸ் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகை நகலை தான் பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொபைல்ஃபோன் விவரம் அடங்கிய சிடி-யை அளிக்காதது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ராகுல் சர்மாவுக்கு அளித்த நோட்டீஸ் காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளக்கம் கோரும் நோட்டீஸ் கடந்த ஜனவரி 27-ல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இறுதி நோட்டீஸ் ஜூலை 28-ல் அளிக்கப்பட்டது. அதில் 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

2002-ம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலை சம்பவத்தின் போது நரோடா காம், நரோடா பாட்டியா, குல்பர்க் சொஸைட்டி ஆகிய இடங்களில் பாதுகாப்பு பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளிடமிருந்து வந்த மொபைல் ஃபோன் அழைப்புகள் அடங்கிய சிடி-யை அவர் அளிக்கவில்லை என ராகுல் சர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது.

காவல்துறை துணை ஆணயர் (டிசிபி) பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டபோது சிடி-க்களை தனது உயர் அதிகாரிகளிடம் சர்மா அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவருக்கு மாநில அரசு நோட்டீஸ் அளித்தது.

தனக்கு எந்த அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்ற விவரம் கோரி நீதிமன்றத்தில் ராகுல் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை குஜராத் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

சஞ்சீவ் பட், ராகுல்சர்மாவுக்கு பிறகு மோடி அரசு தன்னை வேட்டையாடுகிறது என நேற்று முன் தினம் ஐ.பி.எஸ் அதிகாரியான ரஜனீஷ் ராய் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேவைப்பட்டால் தலையிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். ஆனால் அடுத்த நாளான சனிக்கிழமையே ராகுல் சர்மா மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில விஷயங்களில் மத்திய அரசு தலையிட விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு விருப்பம் தெரிவித்தால், மத்திய அரசு தலையிட முடியும் என்று சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.