அன்புடையீர்அஸ்ஸலாமுஅலைக்கும். இன்ஷா அல்லாஹ் ! எதிர்வரும் நோன்புப் பெருநாள் அன்று துபை தேரா ஈத் முஸல்லாஹ் மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலிருக்கும் அதிரை சகோதரகள் சங்கமிக்கும் ஒர் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரை சகோதரர்கள் மட்டுமே ஏரத்தாழ 3000 பேருக்கும் அதிகமானோர் இருக்கக்கூடும். நமதூரைவிட சிறிய சிறிய ஊர்களின் மக்களெல்லாம் ஸஹர் /இஃப்தார் நிகழ்சிகள் மூலம் ஒன்று கூடுகின்றனர். இதுவரைக்கும் அதிரை சகோதரகளுக்குள் இத்தகைய ஒருமித்த முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2011) முதல் இதற்கான முயற்சியை நமதூர் தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். ஊர்மக்களை ஒன்றிணைக்கும் இந்த உன்னத முயற்சி வெற்றிபெற உங்கள் வருகையையும் உறுதி செய்வதோடு அதிரை நண்பர்களையும் அழைத்து வரவும்.
பிற அமீரகங்களிலிருந்து பெருநாளன்று துபைக்கு தொழுவதற்கு வரும் அதிரை சகோதரர்கள் தவறாமல் இந்த அரிய சந்திப்பில் கலந்து கொண்டு தமது உறவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டு பரஸ்பரம் முஸாபஹா செய்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
துபாய்-டேரா பகுதியில் பெருநாள் தொழுகை நடைபெறும் ஈத் முஸல்லா மைதானத்திற்கு வருவதற்கான வரைபடமும், மைதானத்தின் வலதுபுறம் பரஹாரோட்டில் சகோதரர்கள் கூடுமிடமும் இணைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகை முடிந்து அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் இந்த நல்ல சந்திப்பு நிகழ்வு நிறைவுறும் என்பதால் வேறு பள்ளிகளில் பெருநாள் தொழுதவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.
குறுகியகால அவகாசம் மட்டுமே இருப்பதால் இந்ததகவலை அனைத்து BLOG, FACEBOOK மற்றும் மின்னாடல்கள் தொடர்புகளுக்கும் அனுப்பி வைக்கவும் வேண்டப்படுகிறார்கள். இன்ஷா அல்லாஹ் இந்த சந்திப்பை காணொளி மற்றும் (வாய்ப்பிருந்தால்) நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.