புதுடில்லி : யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது அறக்கட்டளை மீது, அன்னிய செலாவணி விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்தேவின் ஆதரவாளர்களான ஆங்கிலேய தம்பதியர், ஸ்காட்லாந்தில் ஒரு தீவை இவருக்கு பரிசாக அளித்துள்ளனர். இந்த தீவு உண்மையிலேயே வாங்கப்பட்டதா, அல்லது அன்பளிப்பாக வழங்கப்பட்டதா? என்ற விவரத்தை, பிரிட்டன் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஸ்காட்லாந்தின் லிட்டில் கும்ரே தீவில் செயல்படும் ராம்தேவின் சுகாதார மையம் குறித்த தகவலையும் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். மடகாஸ்கர் தீவில் உள்ள அதிகாரிகளிடமும் ராம்தேவ் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.