கொச்சி:காவல் நிலையத்தில் தொழுகை நடத்திய இளைஞரை போலீசார் கொடூரமாக தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஒரு வழக்கு விசாரணைக்காக அரூர் காவல் நிலையம் சென்ற ரஹீம் என்ற முஸ்லிம் வாலிபரைதான் ஆய்வாளர் சிவன்குட்டி மற்றும் மூன்று காவலர்கள் அடித்து துவைத்தனர்.

இரவு 9 மணியளவில் வந்த ஆய்வாளர் சிவன்குட்டி மற்றும் மூன்று காவலர்களும் ஒன்றும் விசாரிக்காமலையே அடிக்கத் துவங்கினர்.
காவல் நிலையத்தில் தொழுகை நடத்தினார் என்று அறிந்ததும் “நீ என்ன ஒசாமிவின் ஆளா?…” போன்ற கேளிவிகளை கேட்டும், மற்றும் பல மோசமான வார்த்தைகளை பேசியும் ஒருமணி நேரம் கடுமையாக தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது வரும் என்பதை அறிந்த அவர்கள் “தப்பி ஓட முயன்றதால் ஏற்பட்ட காயம்” என்று வழக்கை மாற்றி எழுதினர். நீதிபதியுடன் நடந்த சம்பவத்தை கூறினால் பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது காயங்களை கண்ட நீதிபதி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார். பின்பு அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
காவல் நிலையத்தில் தொழுகை நடத்திய இளைஞரை போலீசார் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.