N

6.10.11

சஞ்சீவ் பட் கைது விவகாரம் – களம்காணுகிறார் காந்தியவாதி சன்னி வைத்தியா


மும்பை:குஜராத் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் ஒன்று திரண்டுள்ளன.
குஜராத் அரசிற்கெதிராக உண்மைகளை வெளிக்கொணற்பவர்களை மோடி அதிகாரத்தை பயன்படுத்தி  பயத்தை உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார இப்போக்கை கண்டித்து மாநில அளவில் போராட்டங்களை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவசர கால சூழ்நிலை போன்ற ஒன்று தற்போது குஜராத்தில் நிலவுகின்றது. இப்போது நமது எதிர்ப்பை நாம் வெளிப்படுத்தவில்லை  என்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதாக பழம்பெரும் காந்தியவாயான சன்னி வைத்தியா தெரிவித்துள்ளார்.
‘என்னுடைய வயது தற்போது தொன்னூற்றி ஐந்து(95), பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன், ஆனால் தற்போது குஜராத்தில் அறிவிக்கப்படாத அவசரகால நிலை ஏற்பட்டுள்ளது, இங்கு யார் அரசிற்கெதிராக குரல் கொடுத்தாலும் சிறைக்குச் சென்றாக வேண்டிய நிலையுள்ளதாக’ காந்தியவாதி வைத்தியா மேலும் தெரிவித்தார்.  
குஜராத் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை சர்வாதிகாரம் என்று கூறிய அவர், இப்போகிற்கெதிராக மக்கள் இனியும் மௌனம் காக்காமல், எங்களுடன் போரட்டத்தில் இணைய வேண்டும் என்பதாக அவர் கேட்டுக்கொண்டார். எங்கு உண்மைகள் வெளிவந்துவிடுமோ என்று பயந்துள்ள மோடி அரசு, அதிகார துஷ்ப்ரயோகம் செய்து அதற்கெதிராக குரல் கொடுப்பவர்களை நசுக்க முயல்கின்றது.  இதன் மூலம் உண்மையை கூற விரும்புபவர்களை   பயமுறுத்தும் போக்கை கையாண்டுள்ளதாக மதசார்பற்ற ஜனநாயக தலைவர் வாரிகநாத் ராத் கூறியுள்ளார்.
அரசு பயந்து போயுள்ளது, மக்கள் முட்டாள்கல்லர், சரியான தருணத்தில் அரசிற்கு அவர்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பிரபல சமூக ஆர்வலரான தீஸ்தா செதல்ச்வாத் கூறுகையில், மோடி அரசின் அராஜகங்களை மக்களிடமே கொண்டு செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். உண்மையை கூற முன்வரும் மற்ற ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாகும் அவர் மேலும் கூறினார்.

1 comments:

  1. முஹம்மது சாலிஹ்October 6, 2011 at 5:22 PM

    இது நியாயத்திற்க்கான போரட்டம் இதற்க்கு மக்கள் பெரும் ஆதரவு அளிக்க வேண்டும்-முஹம்மது சாலிஹ்

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.