நமதூரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்வடைகிறது. இதையடுத்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அரசியல் கட்சியினர் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமடைந்துள்ளனர்.

இதையடுத்து 19ம் தேதி 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறும்.
இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிராசரத்தை முடுக்கி விட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வேட்பாளர்களுடன் ஊர்வலங்களை நடத்துவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது என அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.