பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிகிறது. தேர்வு கால அட்டவணையை அரசு பொது தேர்வுகள் துறை நேற்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 தேர்வை 7.50 லட்சம் மாணவ&மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். 2008ம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதே போல கூடுதலாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஆகும். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு முக்கிய படமான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு இடையே விடுமுறை நாட்கள் உள்ளன.
தேர்வு கால அட்டவணை
8.3.2012 மொழித்தாள் ஒன்று
9.3.2012 மொழித்தாள் இரண்டு
10, 11ம்தேதிகள் விடுமுறை
12.3.2012 ஆங்கிலம் முதல் தாள்
13.3.2012 ஆங்கிலம் 2ம் தாள்
14,15ம் தேதிகள் விடுமுறை
16.3.2012 இயற்பியல், பொருளியல், உளவியல்
17,18ம் தேதிகள் விடுமுறை
19.3.2012 கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவியல்
20.3.2012 வணிகவியல், மனையியல், புவியியல்
21ம் தேதி விடுமுறை
22.3.2012 வேதியியல், கணக்கு பதிவியல், சுருக்கெழுத்து.
23, 24, 25ம் தேதி விடுமுறை
26.3.2012 உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வணிக கணிதம்
27ம் தேதி விடுமுறை
28.3.2012 தொடர்பு ஆங்கிலம், இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழிப் பாடம், தட்டச்சு
29ம் தேதி விடுமுறை
30.3.2012 தொழில்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~வாழ்த்துக்கள்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.