N

17.12.11

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு


டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வெள்ளிக்கிழமை கணிசமாக உயர்ந்தது. தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ரூபாயின் மதிப்பு 94 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 52.70 தந்தால் போதும் என்ற நிலை உருவானது.
அன்னியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 1.43 வரை உயர்ந்தது.
ரூபாயின் சரிவைத் தடுக்க ரிசர்வ் வங்கி விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக சந்தையில் டாலரை விற்பனை செய்யும் போக்கு அதிகம் காணப்பட்டது. இதனால் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.