மும்பை:ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் அன்னா ஹஸாரேயின் உறவு குறித்த பத்திரிகைச் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அது குறித்து விளக்கமளிக்க ஹஸாரே குழுவினர் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தனர்.

இஸ்லாம் ஜிம்கானா பகுதியில் ஏற்பாடுச் செய்திருந்த கூட்டம் ரத்துச்செய்ததை தொடர்ந்து க்ரோஃபோர்ட் மார்க்கெட்டில் வைத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. இச்சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கேஜ்ரிவால்
கூறுகையில், “அரசும், ஊழல்வாதிகளும் ஹஸாரே குழுவினர் மீது பொய்யான பிரச்சாரங்களை நடத்துகின்றனர். நாங்கள் எப்பொழுதுமே வகுப்புவாதத்திற்கு எதிரானவர்கள்.பா.ஜ.க ஆளும் குஜராத்திலும், அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகாரிலும் வளர்ச்சிக் குறித்து ஹஸாரே பாராட்டினார் என ஊடகங்கள் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றன. ஹஸாரே குழுவினர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என ஊடகங்கள் பொய் பிரச்சாரம் நடத்துகின்றன. இன்றைய கூட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் தவறான புரிதலை களைய முடிந்தது.” என அவர் கூறினார்.
டெல்லியில் ஹஸாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர் உலமா கவுன்சில் தலைவரான மவ்லானா மஹ்மூத் தரியாபாதி உள்ளிட்டவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர். இச்சந்திப்பின் மூலம் அன்னா ஹஸாரேயை குறித்த தவறான புரிதல் நீங்கியதாக மஹ்மூத் தரியாபாதி தெரிவித்தார்.
ஹஸாரே உண்மையிலேயே ஊழலுக்கு எதிறாக போராடுபவனா?ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதிகளின் கையாளாக வேலை பார்ப்பவனா? இவ்விரண்டிற்கும் பதில்,பா.ஜ.க.ஆட்சியில் அமர்ந்தால்தான் அவன் யார் என்ற உண்மை தெரியவரும்!ஏனென்றால் நிச்சயம் பா.ஜ.க.காரன் நேர்மையானவன் அல்லன்!இருவருமே திருட்டு கும்பல்கள் தான்!!
ReplyDelete