N

28.1.12

கேரள மாநில ஆளுநர் எம்.ஒ.ஹெச்.ஃபாரூக் மரைக்கார் மரணம்


சென்னை:கேரள மாநில ஆளுநர் எம்.ஒ.ஹெச்.ஃபாரூக் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து வியாழக்கிழமை இரவு 9.15 மணியளவில் அவரது மரணம் நிகழ்ந்தது. சிறுநீரகம் தொடர்பான உடல்நலக் குறைவால் அவர் சிகிட்சை பெற்று வந்தார்.
1937-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி ஃபாருக் பிறந்தார். பாண்டிச்சேரியை பிரஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்காக நடந்த போராட்டத்தில் அவர் பங்கேற்றார். மூன்று தடவை பாண்டிச்சேரி முதல்வராக பதவி வகித்தார். மூன்று தடவை மக்களை உறுப்பினராக இருந்தார். 1991-92 காலக்கட்டத்தில் மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2004-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் இந்திய தூதராக பணியாற்றினார். பின்னர் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றினார். தொடர்ந்து 2011 ஆகஸ்ட் 25-ஆம் தேதி கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநரின் மறைவுக்கு குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, கே.வி.தாமஸ், வயலார் ரவி, முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கே.சி.வேணுகோபால், கேரள மாநில எதிர்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், முதல்வர் உம்மன் சாண்டி, சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.