N

28.1.12

பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் ஒரு மரணம்: ஊட்டியில் சோகம் (காணொளி)


                    

எச்சரிக்கை: இளகிய மனம் கொண்டவர்கள் இதிலுள்ள காணொளியைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், சாகசம் செய்த காவலர் ஒருவர் பரிதாபகரமாக உயிர் இழந்தார். இந்த சோக நிகழ்வை நேரில் கண்டதால் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஊட்டி விளையாட்டு அரங்கில், குடியரசு தின நிகழ்ச்சிகள் நேற்று காலை நடந்தன. ஆயுதப்படை காவலர் பாண்டியன், பைக்கில் பறந்து சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். ஓடுகளை காலால் உதைத்து தூள் தூளாக்கினார். பின்னர், ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். தொடர்ச்சியாக காவலர் பாண்டியன் பல சாகசங்களை நிகழ்த்தவே பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தி வந்தனர்.

மாணவர்களை வரிசையாக தரையில் படுக்க வைத்து சாகசம் செய்த போது, தான் தாண்ட வேண்டிய இடைவெளியை சரியான முறையில் கடக்க முடியாமலோ அல்லது தவறான கணிப்பின் காரணமாகவோ, தரை விரிப்பின் முன்புறமாக விழுந்து பல்டி அடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது தலை, உயரமான தரை விரிப்பின் மீது நேரடியாக மோதி தலை குத்திய நிலையில் விழுந்தார்; அவரால் எழ முடியவில்லை. ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதென உஷாரடைந்து பலரும் ஓடி வந்து அவரை மீட்டனர்.

எழுந்து நிற்க முடியாத அளவுக்கு, நிலை குலைந்து, கண்கள் மேல் நோக்கிய நிலையில் மயக்கமடைந்திருந்தார். அருகிலிருந்தவர்கள், அவரை உடனடியாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


                                          

தொடர்ந்து கரவொலி எழுப்பிய பார்வையாளர்கள், கடைசியாக அவர் மாணவர்களை தாண்ட முயற்சித்த போதும், கரவொலி எழுப்பினர். ஆனால் பலத்த கைதட்டலுக்கு இடையே அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது, பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது காவலர் பாண்டியன் தலைகவசம் அணிந்திருந்தால் இச்சோக நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு குறைவு எனலாம்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.