பெங்களூர்:கர்நாடகா சட்டப் பேரவையில் நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் செல்ஃபோனில் ஆபாச வீடியோவை பார்த்த 3 அமைச்சர்கள் பதவி விலகிய சம்பவத்தில் விசாரணை நடத்துவதற்கான சட்டப்பேரவை விசாரணை குழு குறித்து இதுவரை முடிவாகவில்லை.
பதவி விலகிய 3 அமைச்சர்களையும் பாதுகாக்க திட்டமிடும் பா.ஜ.க தலைமையின் நடவடிக்கையில் எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் சதானந்த கவுடா, பதவி விலகப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
செல்ஃபோனில் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் எம்.எல்.ஏ பதவிகளையும் ராஜினாமா செய்யவேண்டும் என்பது கவுடாவின் கோரிக்கையாகும். ஆனால், பதவி விலகிய 3 அமைச்சர்களுக்கும் காரணம் கேட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸிற்கு பதில் கிடைத்த பிறகே சட்டசபை விசாரணை குழுவை நியமிக்கவேண்டும் என்பது சபாநாயகர் போபய்யாவின் கருத்தாகும். இம்மாதம் 13-ஆம் தேதிக்குள் 3 பேரும் பதில் அளிக்கவேண்டும்.
முன்னாள் அமைச்சர்களின் ஒழுக்கச்சீரழிவை ராஜினாமாவோடு ஒதுக்கிவிடலாம் என பா.ஜ.க திட்டமிடுகிறது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.