N

12.2.12

யெமன் எதிர்ப்பு போராட்ட புகைப்படத்திற்கு உலக ஃப்ரஸ் ஃபோட்டோ விருது


ஆம்ஸ்டர்டாம்:நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக அரபுலக வசந்தத்தை தனது காமெராவில் பதிவுச்செய்த ஸ்பெயின் நாட்டு ஃபோட்டோக்ராஃபர் சாமுவேல் அராண்டாவுக்கு 2011-ஆம் ஆண்டு உலக ப்ரஸ் ஃபோட்டோ விருது கிடைத்துள்ளது.
யெமன் நாட்டில் நடைபெறும் ஜனநாயக போராட்டத்தின் போது காயமடைந்த உறவினரை நெஞ்சோடு சேர்த்து ஆறுதல் கூறும் பெண்மணியின் புகைப்படத்திற்காக சாமுவேலுக்கு விருது கிடைத்தது. அக்டோபர் 15-ஆம் தேதி எடுக்கப்பட்ட இப்புகைப்படம் அரபுலக புரட்சியின் நிதர்சனத்தை பிரதிபலிப்பதாக விருது தேர்வாளர்கள் தெரிவித்தனர்.
யெமனில் மட்டுமல்ல எகிப்து, துனீசியா, லிபியா, சிரியா ஆகிய இடங்களில் நடந்த ஜனநாயக போராட்டங்களை இப்புகைப்படம் எடுத்து இயம்புவதாகவும், இவ்விடங்களில் நடைபெறும் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் உள்ளது என்பதின் நேரடி சாட்சியாக இப்புகைப்படம் அமைந்துள்ளதாகவும் விருது தேர்வு கமிட்டி தலைவர் ஐதன் ஸல்லிவன் கூறினார்.
ஜப்பானில் சுனாமி பேரிடர் தொடர்பான ஃபோட்டோ பிரிவில் அசோசியேட் ப்ரஸ்ஸிற்கு மூன்று பரிசுகள் கிடைத்துள்ளன. செய்திகளில் தனிநபர் பிரிவில் மிகச்சிறந்த புகைப்படத்திற்கான விருதை ஏஜண்ட்ஸ் பிரான்சு பிரஸ்ஸின் ஜப்பானீஸ் ஃபோட்டோக்ராஃபர் யாஸுயோஷி ஷிபா பெற்றுள்ளார்.
24 நாடுகளைச் சார்ந்த 57 ஃபோட்டோக்ராஃபர்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஐய்யாயிரத்திற்கும் மேற்பட்ட ஃப்ரொஃபஸனல் ஃபோட்டோக்ராஃபர்கள் சமர்ப்பித்த எண்ட்ரிகளில் இருந்து மிகச்சிறந்த புகைப்படங்கள் தேர்வுச் செய்யப்பட்டன.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.