
ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்றுப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.இறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்திய ஆடவர் அணி, பிரான்ஸைஸயும், இந்திய மகளிர் அணி, தென் ஆஃப்பிரிக்காவையும் சந்திக்கின்றன.
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய ஆடவர் அணி 4-2 என்ற கணக்கில் போலந்தையும், இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் இத்தாலியையும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
5 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய ஆடவர் அணி 15 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
கனடாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் டிரா செய்ததன் மூலம் 5 ஆட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ். இதனால் கனடா, போலந்து அணிகளின் ஒலிம்பிக் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
இந்தத் தொடரில் மொத்தம் 11 கோல்கள் அடித்துள்ளார் இந்தியாவின் சந்தீப் சிங். இதன்மூலம் இந்த தகுதிச்சுற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். இதேபோல் அதிக கோல்கள் அடித்த அணிகளின் வரிசையில் இந்தியா 5 ஆட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 36 கோல்களை அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.