N

8.3.12

இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட் ஓய்வு?

இந்திய வீரர் டிராவிட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு நாளை ஏற்பாடு செய்துள்ளார் ராகுல் டிராவிட். செய்தியாளர் சந்திப்பில் டிராவிட் ஓய்வு குறித்து பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பில் பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன் உடன் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 39 வயதான டிராவிட் முதன்முதலில் 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். தனது 17 வருட கிரிக்கெட் வாழ்வில் 36 டெஸ்ட் சதம் உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ராகுல் டிராவிட்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.