N

30.3.11

இந்தியா அபார வெற்றி


மொகாலி: லக கோப்பை 2 வது அரை இறுதியில் இந்தியா  பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய அணியில் அஷ்வீன் பதிலாக வேக பந்துவீச்சாளர் நெஹரா சேர்க்கப்பட்டுள்ளார்.  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 

இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களுக்கு  ஆட்டம்இழந்தது.

 இந்தியாவை தொடர்ந்து ஆடிவந்த  பாகிஸ்தான் அணி  49.5 ஓவர் முடிவில்  231 ரன்களுக்கு அனைத்து  விக்கெட் இழந்தது  . கம்ரான் அக்மல் 19 ரன்களுடன், முகமது ஹபீஸ் 43   ரன்களுடன்,  ஆசாத் ஷபிக் 30 ரன்களுடன்,  யூனிஸ் கான் 13 ரன்களுடன்,உமர் அக்மல் 29  ரன்களுடன், அப்துல் ரசாக் 3 ரன்களுடன், அப்ரிடி19 ரன்களுடன்,வகாப் ரியாஸ்  8 ரன்களுடன்  ,உமர் அக்மல் 2 ஆட்டம் ரன்களுடன்Þமிஸ்பா 56 ரன்களுடன்  இழந்தார்கள்.  சயீத் அஜ்மல் 1 ரன்களுடன் அனைத்து  விக்கெட்  இழந்தது பாகிஸ்தான் .

 கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி, மொகாலி பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. இந்தியா  பாகிஸ்தான் மோதும் எந்த ஒரு விளையாட்டுப் போட்டியுமே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், ஒரு விதமான பதற்றத்தையும் உண்டாக்குவது வழக்கம். அதிலும், கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும்போது களத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலுமே அனல் பறக்கும். அலுவலகங்களில் வேலையே ஓடாது. கடைகளில் இயங்கும் டிவி.யில் ஸ்கோர் பார்க்க கூட கூட்டம் அலை மோதும்.

சாதாரண போட்டிக்கே இப்படி என்றால், உலக கோப்பையில் இரு அணிகளும் மோதும்போது எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்? மொகாலியில் இன்று நடக்கும் 2வது அரை இறுதி ஆட்டம் இரு நாட்டு ரசிகர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் உசுப்பிவிட்டுள்ளது என்றால் மிகையல்ல. பி பிரிவில் இருந்து அரை இறுதிக்கு முன்னேறிய ஒரே அணி இந்தியா. லீக் சுற்றிலும், ஆஸ்திரேலிய அணியுடனான கால் இறுதியிலும் இந்தியா சற்று தடுமாற்றத்துக்குப் பிறகே வெற்றியை வசப்படுத்தியது. இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் பெரிய ஸ்கோர் அடித்தும், வெற்றி வாய்ப்பை வீணடித்தது. நாக் அவுட் சுற்றில் அதுபோன்ற தவறுகளுக்கெல்லாம் இடமே இல்லை என்பதை இந்திய வீரர்கள் உணர்ந்துள்ளனர்.

வலுவான பேட்டிங் வரிசை, சொந்த மண்ணில் விளையாடுவது மற்றும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு சாதகம். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றதில்லை என்ற வரலாறும் இந்திய வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்க உதவும். சச்சின்  சேவக் ஜோடி உறுதியான அடித்தளம் அமைத்துவிட்டால், அடுத்து வரும் வீரர்கள் ‘வீடு கட்டுவது’ உறுதி. ஆட்டத்துக்கு ஆட்டம் ஆல்ரவுண்டராக ஜொலித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் செல்லும் யுவராஜ், யாமிருக்க பயமேன் என்று நம்பிக்கை தருகிறார்.

கோஹ்லிக்கு பதிலாக யூசுப் பதான் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. முனாப்புக்கு பதில் நெஹ்ரா அல்லது ஸ்ரீசாந்தை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கிலும் கவனம் செலுத்தினால் இந்தியா பைனலுக்கு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது.
அதே சமயம், ஏ பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் கால் இறுதியில் வெஸ்ட் இண்டீசைப் போட்டுத் தள்ளிய பாகிஸ்தான் அணியும் இறுதி போட்டியில் இடம் பிடிக்கும் வெறியுடன் உள்ளது. பந்துவீச்சுதான் பாகிஸ்தானின் முக்கிய பலமாக உள்ளது. உமர் குல், அக்தர், ரசாக் வேகமும் அப்ரிடியின் சுழலும் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும்.

ரன் குவிப்பில் இந்தியாவின் சச்சின், சேவக் முன்னிலையில் இருக்க, விக்கெட் வேட்டையில் பாக். கேப்டன் அப்ரிடி இதுவரை 21 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உமர் குல் வேகத்தையும் அப்ரிடியின் சுழலையும் சமாளித்துவிட்டால் இந்தியா பெரிய ஸ்கோர் அடித்து மிரட்டலாம். மொகாலி ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இந்த உலக கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ள ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ அக்தருக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமபலம் வாய்ந்த பரம வைரிகள் மோதும் இந்த ஆட்டம், மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.