ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பைச் சார்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் லாகூரின் குஜ்ரன்வாலா நகரத்தில் திரண்டனர். அமெரிக்காவுடனான உறவை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அமெரிக்காவுடனான உறவை பலப்படுத்துவதற்கு பதிலாக மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுதான் அரசு செய்யவேண்டியது என அவ்வமைப்பின் தலைவர் ஸய்யித் வாஸீம் அக்தர் தெரிவித்தார்.
செப்டம்பர் 11 நிகழ்விற்கு பிறகு அமெரிக்காவின் வருகைக்கு முன்பு பாகிஸ்தான் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. அமெரிக்கர்கள் இங்கு வந்தபிறகுதான் குண்டுவெடிப்புகள் தொடர்கதையானது என வாஸீம் கூறினார். ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தும் ஆளில்லா விமானத்தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனவும், அமெரிக்காவின் கொள்கைகளை பின்தொடர்வதை பாகிஸ்தான் நிறுத்தவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.