உலகில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி 20 கோடியை தாண்டிவிட்டதாக ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ஐ.என்.ஒ அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை குறித்து விவாதிக்க பிரான்சு நாட்டின் கானில் இம்மாதம் மூன்றாம் தேதி ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்னோடியாக ஐ.என்.ஒ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிதான் வேலையில்லாத்திண்டாட்டத்திற்கு முக்கிய காரணம் எனவும், பல்வேறு நாடுகளில் நிலவும் சமூகப்பிரச்சனைகளுக்கு வேலையின்மை அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஐ.என்.ஒ அறிக்கை எச்சரிக்கை விடுக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலைமையை எட்டவேண்டுமானால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எட்டுகோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போதைய சூழலில் இதனை அடைய ஏறத்தாழ ஐந்து வருடங்களாவது தேவைப்படும் என அறிக்கை கூறுகிறது.பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலகில் தேவையான வேலைகளின் பகுதி எண்ணிக்கைதான் புதியதாக உருவாகியுள்ளது என அவ்வறிக்கை கூறுகிறது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.