கொல்கத்தா:கல்வி வளர்ச்சி, அடிப்படை வசதிகள், சுய தொழில் உதவி ஆகிய துறைகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு சாரா அமைப்பான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் நடத்தும் நீண்டகால திட்டங்களின் ஒரு பகுதியாக கம்யூனிட்டி செண்டர்கள், குடிநீர்திட்டம், வட்டியில்லா சிறுகடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில் ரிக்ஷா விநியோகம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஃபவுண்டேசனின் சேர்மன் இ.அபூபக்கர் துவக்கி வைக்கிறார்.
இன்று காலை மஹல்தர்பாரா கம்யூனிட்டி செண்டரில் 10 கம்யூனிட்டி செண்டர்களின் அதிகாரப்பூர்வமான திறப்பு விழா
நடைபெறுகிறது. ஸ்ரீகிருஷ்ணபூர், ஹாஜிபாரா, அகுண்டாபாதியா, தும்பாரா, பல்காச்சி, கோஹித்பூர், கோபிநாத்பூர், ஸொலுவா, தெகாரிபாரா ஆகிய இடங்களில் இதர கம்யூனிட்டி செண்டர்கள் இயங்கும்.டியூசன் வகுப்புகள், கல்வி வழிகாட்டி, தொழில் பயிற்சி, இதர உதவிகள் ஆகியன இம்மையங்களில் அளிக்கப்படும்.
நடைபெறுகிறது. ஸ்ரீகிருஷ்ணபூர், ஹாஜிபாரா, அகுண்டாபாதியா, தும்பாரா, பல்காச்சி, கோஹித்பூர், கோபிநாத்பூர், ஸொலுவா, தெகாரிபாரா ஆகிய இடங்களில் இதர கம்யூனிட்டி செண்டர்கள் இயங்கும்.டியூசன் வகுப்புகள், கல்வி வழிகாட்டி, தொழில் பயிற்சி, இதர உதவிகள் ஆகியன இம்மையங்களில் அளிக்கப்படும்.
இன்று மதியம் ஜுகோரில் குடிநீர் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி நடைபெறும்.முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஸகார்திகி பகுதியில் வறட்சி பிரதேசங்களில் 13 குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டமாகும் இது. தற்பொழுது பல கிலோமீட்டர்கள் நடந்து இப்பகுதி மக்கள் குடிநீரை சேகரிக்கின்றனர்.
நாளை காலை பாக்குரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுயதொழில் உதவித் திட்டத்தின் இரண்டாவது கட்டம் துவங்கும். வட்டியில்லா கடன் திட்டத்தின் அடிப்படையில் 20 பேருக்கு சைக்கிள் ரிக்ஷாக்கள் அளிக்கப்படும்.
ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் பொதுச்செயலாளர் ஒ.எம்.அப்துஸ்ஸலாம், மேற்குவங்காள மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஷஹாபுத்தீன், எஸ்.டி.பி.ஐ மேற்குவங்காள மாநில தலைவர் தஈதுல் இஸ்லாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.