வாலாஜா சாலை&சோளிங்கர் இடையே உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்களை நிறுத்துவது முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வரும் மக்கள், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வரும் மக்கள், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை&பெங்களூர் மார்க்கத்தில் சோளிங்கர்&வாலாஜா சாலை இடையே உள்ளது மருதாலம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை நம்பி மருதாலம், வாங்கூர், காட்ரம்பாக்கம், தலங்கை, பெருங்காஞ்சி, மேல் வெங்கடாபுரம், கடப்பந்தாங்கல், ஒழுகூர், கன்னிகாபுரம், மலையனூர், கோபாலபுரம், கோடியூர், முட்டவாடி, ஒண்டியூர், நீலகண்டராயன்பேட்டை என 30க்கும் அதிகமான சிற்றூர் மக்கள் இருக்கின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் வேலூர்&அரக்கோணம், அரக்கோணம்&பெங்களூர் பாசஞ்சர் ரயில்கள், அரக்கோணம்&ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நிற்கும். இந்நிலையில் புதிதாக இயக்கப்படும் வேலூர்&சென்னை கடற்கரை ரயிலும் நின்று செல்ல வேண்டும் என்று போராடினர். திடீரென 28.02.2010 முதல் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்பது ரத்தானது.
இதனை கண்டித்து 14.03.2010ல் கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் ரயில்களை நிறுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் அனைவரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கேட்டபோது, ‘மருதாலத்தில் ரயில்கள் நிற்பதால் போதிய வருவாய் இல்லை. நஷ்டம்தான் ஏற்பட்டது. எனவே அங்கு ரயில்களை நிறுத்த வாய்ப்பில்லை’ என்றனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.