
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி, தனது கட்சியை காங்கிரசோடு இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மே.வங்கத்தில் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுமாறு சிரஞ்சீவியிடம் காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து அவர் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கத்தின் கரக்பூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதையடுத்து அவர் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கத்தின் கரக்பூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
கேரளாவில் பிரசாரம் செய்வது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஆந்திர எல்லை பகுதிகளில் தெலுங்கு பேசும் மக்கள் ஏராளமானவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் மத்தியில் சிரஞ்சீவி மிகவும் பிரபலம்.
ஏப்ரல் 5ம் தேதி முதல் சிரஞ்சீவி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்கிறார். தமிழகம் வரும் அவருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழ்நாடு தெலுங்கர் முன்னேற்றம் முடிவு செய்துள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.