N

25.3.11

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா


உலககோப்பை கிரிக்கெட் கால் இறுதி போட்டியில் இன்று ஆமதாபாத்தில் நடைபெற்ற 2 வது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் 118 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான், அஸ்வின், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக யுவராஜ் சிங் 57 ரன்களும் தெண்டுல்கர் 53 ரனகளும் எடுத்திருந்தனர். இதையடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.