அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று திருச்சியில் 11 மணிக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து அவர் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் இருந்து முக்கியமான அம்சங்களை குறிப்பிட்டார்.
தாய்மார்களுக்கு பேன், மிக்ஸி, கிரைண்டர் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாத விடுமுறையும் 12 ஆயிரம் நிதியும் வழங்கப்படும்.
தனியார் கேபிள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்து காப்பீட்டுத்திட்டம்.
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள அனைத்து குடும்பங்களூக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளூம் தொடரும்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.