நக்கீரன் இன்று வெளியிட்டுள்ள இதழில் மெகா சர்வே ஒன்று வெளியிட்டுள்ளது தமிழகத்தில் எந்த கட்சி வெற்றி பெறும் என தமிழகம் முழுவதும் சர்வே செய்தார்களாம்...
அதில்...தொகுதிவாரியாக எடுத்த முடிவுகளை சர்வே லிஸ்டாக வெளியிட்டுள்ளது...பொதுவாக ஜூனியர்விகடன் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக சொல்வார்கள்..ஆனாலும் இந்தவாரம் ஜெயலலிதா சசிகலா பிடியில் இருக்கிறார்..வீட்டு சிறை என்றெல்லாம் செய்தி வெளியிட்டுள்ளது..அதாவது ஜெவை கோபப்படுத்தும் செய்திகளையும் இதில் வெளியிடுகிறார்கள் ஆனால் நக்கீரன் அப்படியல்ல...நக்கீரன் முழுக்கவே தி.மு.க ஆதரவு செய்திகள் மட்டும்தான் தாங்கி வருகிறது....இந்த சர்வே லிஸ்ட் கூட..234 தொகுதிகளிலும் தி.மு.க வே வெற்றி பெறும் என்ற வகையில்தான் வெளியிட்டிருக்கிறார்கள்...தொகுதிவாரியாகஅலசினார்களாம்..வாக்காளர்களிடம் கேட்டார்களாம்..அதில் ஒருவர் கூட தி.மு.க அரசை குறை சொல்லவில்லையாம்..
ஸ்பெக்ட்ரம் விவகாரம் அறிவுஜீவிகளிடம் மட்டுமே விவாதிக்கப்படுகிறது..அதனால் பிரச்சனை இல்லை என்கிறார்கள்....அதாவது மக்களுக்கு இவர்கள் செய்த ஊழல் தெரியவில்லை..அதனால் வாக்கு பாதிக்கவில்லை என்கிறார்கள்...
விலைவாசி ஓரளவு ஓட்டுகளை பாதிக்குமாம்....சூப்பர் அலசல்.....ஆனால் அனைத்து இடங்களிலும் தி.மு.கவே வெற்றி பெறும் என்பது போல வெளியிட்டிருப்பது தி.மு.கவினரே நம்ப மாட்டார்கள்....
எங்கள் ஊர் ஒரு பெட்டிக்கடையில்..விற்பனையை.. பார்த்தால் கூட,ஜூனியர் விகடன் 50,60 விற்பனையாகிறது..ஆனால் நக்கீரன் 15 புத்தகம் மட்டுமே விற்பனை..காரணம் தி.மு.க செய்திகள் மட்டுமே தாங்கிவருவதால்....ராசா கைது சமயம் அவர்கள் வெளியிட்ட தலைப்பு.....ராசா..விரைவில் விடுதலை.....இதுதான் இவர்கள் புலனாய்வு.....
----------------------------------------------------------------------------
ஜெயலலிதா நாளை ஸ்ரீரங்கம் வருகிறார்....ரங்கநாதரை வழிபட்டபின்,அவர் காலடியில் தேர்தல் அறிக்கையை வைத்து வழிபட்டு பிறகு.. அந்த பரபரப்பான அறிக்கையை வெளியிடுவாராம்...அதன் பின் அரசியல் களம் இன்னும் சூடாகும்....நாளை தொடங்கப்போகும் அவர் பிரச்சாரத்தின் வேகம் பொறுத்துதான் தேர்தல் களைகட்டும் என நினைக்கிறேன்....ரங்கநாதர் படுத்த கோலத்தில் இருக்கிறார் அதனால் இந்த தேர்தலில் நம் கட்சி படுத்து விட வாய்ப்பிருக்கிறது என்று யாரும் சொல்லாமல் இருந்தால் சரி...-;)).
இலவச செல்ஃபோன்,இலவச கிரைண்டர் மிக்ஸி அறிவிப்பை விட இலவச டிஷ் ஆண்டனா அறிவிப்பு இருக்குமா என்றுதான் ஆசையாக இருக்கேன்...கேபிள் தொழிலை ஒட்டுமொத்தமா இவனுக கட்டுப்பாட்டுல வெச்சிகிட்டு, டிஷ் ஆண்டனா விட்டு, அதையும் சில புது படங்களை மத்த டிவிகள் போட்டா கட் பண்ணிடுற மாறன் அண்ட் கோ வுக்கு ஆப்பு வைக்கணும்...
-------------------------------------------------------
ரஜினி வாய்ஸ் விடுறாரோ இல்லையோ அவரை பத்தி அவர் ரசிகர்களே கவலைப்படலை..(நானும் அவர் ரசிகர்தான்..அதான் சொல்றேன்)அவர் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கட்டும்....இப்போ இந்த விஜய் அரசியலுக்கு வரேன்னு சொல்லி பரபரப்பு கிளப்புனாரே என்னாச்சி...கலைஞர் தான் மறுபடி வரப்போறார் உனக்கு ஆப்பு கன்ஃபார்ம்னு எவனாவது பயமுறுத்திட்டானான்னு தெரியலை...
----------------------------------------------------------------
விஜயகாந்த் மாதிரி மாற்று சக்தியாக தன்னை எதிர்காலத்தில் காட்டிக்கொள்ளப்போகிறார் வைகோ என்கிறார்கள்...ஆனால் அந்த கம்பீரகுரலை இந்த தேர்தலில் கேட்க முடியாதே என்ற வருத்தம் மனதில் கனக்கிறது....சீமான் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை..அவர் என்ன நினைக்கிறார்.....புரியவில்லை...
படங்கள்;நன்றி;நக்கீரன்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.