சீன் 1 டேக் 1
விஜய் - அப்பா ,ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்க பழைய பாணில ஒரு படம் பண்ணறீங்க.. மறுபடி ஃபார்ம்க்கு வந்துடுவீங்களா?
எஸ்.ஏ. சந்திரசேகர் - அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.. மறுபடியும் கலைஞர் ஃபார்ம்க்கு வந்துடக்கூடாது.. அதுதான் முக்கியம்.
விஜய் - பல வருஷங்களா அந்த கட்சில இருந்துட்டு இப்படி திடீர்னு பல்டி அடிக்கறீங்களே..?
எஸ்.ஏ. சந்திரசேகர் - ஆமா , என்ன பிரயோஜனம்.. ஏதாவது தேறும்னு பார்த்தேன்.. ஒண்ணும் பப்பு வேகலை.. சரி ரூட்டை மாத்துன்னு இப்போ அம்மா பக்கம் சாய ஆரம்பிச்சுட்டேன்..
விஜய் - சரி படத்தோட கதை என்ன?
எஸ்.ஏ. சந்திரசேகர் - அரசியல்வாதியின் இழுப்புக்கு இணங்காத ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபீசர் குடும்பத்தை பலி ஆக்கிய அரசியல்வாதியை அந்த ஆஃபீசர் பழி வாங்கறதுதான் கதை...
விஜய் - அட போங்கப்பா.. இந்த புளிச்சுப்போன கதையை எத்தனை படத்துல பாக்கறது?
எஸ்.ஏ. சந்திரசேகர் - அது தமிழனோட தலை எழுத்து.. சாவட்டும் எனக்கென்ன?
விஜய் - சரி ,இந்த டப்பா கதைல எப்படி கலைஞரை தாக்குவீங்க?
எஸ்.ஏ. சந்திரசேகர் - இது ஒரு பெரிய விஷயமா?ஆ ராசா மேட்டர்,நித்யானந்தா மேட்டர் அப்படின்னு இப்பத்த ட்ரெண்ட்ல எதெல்லாம் பரபரப்பா இருக்கோ அதை எல்லாம் தாக்கற மாதிரி பிட் பிட்டா சீன் எடுக்க வேண்டியது.. சம்பந்தமே இல்லைன்னாலும் அதை எடிட்டிங்க்ல சமாளிச்சு கதைல இணைச்சுட வேண்டியது.. எவனாவது பத்திரிக்கக்காரன் மானம் கெடற மாதிரி விமர்சனம் எழுதுனா லாஜிக் இல்லா மேஜிக் அப்படின்னு சமாளிச்சுடலாம்...
விஜய் - சரி.. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மாறு வேஷத்துல போலீஸ் கிராமத்துல வர்ற மாதிரி காட்றீங்களே.. எந்த மாங்கா மடையனாவது அப்படி ரிவால்வரை பப்ளிக்கா வெச்சிருப்பானா?
எஸ்.ஏ. சந்திரசேகர்- என்னப்பா சேம் சைடுல கோல் போடுறே...?
விஜய் - அதைக்கூட மன்னிச்சிடலாம்.. கிராமத்துல இறங்குனதும் திடு திப்னு ஒரு பொண்ணு கிட்ட ஏம்மா இங்கே தீவிரவாதிங்க இருக்காங்களா? அப்படின்னு கேப்பாங்களா? என்னமோ மளிகைக்கடைல துவரம்பருப்பு இருக்கா?ன்னு கேக்கற மாதிரி...
எஸ்.ஏ. சந்திரசேகர் -அதை விடப்பா.. போலீஸ் ஆஃபீசர் எம் பியை செருப்பால் அடிக்கற சீன் எப்படி? கலக்கீட்டமில்ல?
விஜய் - அட போங்கப்பா.. வால்டர் வெற்றிவேல்லயே அதை அவர் பண்ணீட்டாரே..?
எஸ்.ஏ. சந்திரசேகர் - சத்யராஜை சேர்ல கட்டிப்போட்டு வில்லன் குரூப் அவரோட குடும்பத்தை சிதைக்கற சீன் எப்பூடி?
விஜய் - ம்க்கும்.. அது கமல் நடிச்ச அபூர்வ சகோதரர்கள்லயே வந்துடுச்சே..?
எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... சத்யராஜோட சேகுவாரோ கெட்டப் எப்படி?
விஜய் - நல்ல வேளை அவர் உயிரோட இல்லை... ஏம்ப்பா.படத்துல சத்யராஜூக்கு 38 சீன் இருக்கு அதுல 42 சுருட்டு குடிக்கராரு.. 4 பஞ்ச் டயலாக் பேசறாரு, வேற பெருசா அவர் என்ன செஞ்சாரு?
எஸ்.ஏ. சந்திரசேகர் -சரி கோர்ட் சீன்ல சீமான் வக்கீலா எப்படி?
விஜய் - இந்தப்படத்துலயே உருப்படியான ஒரு விஷயம்னா அது சீமான் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும், அவரது வசன் உச்சரிப்பும் தான்...
எஸ்.ஏ. சந்திரசேகர் - ஏம்ப்பா ..தாமிரபரணில விஷால்க்கு ஜோடியா நடிச்ச பானு நல்ல உருப்படி இல்லையா?
விஜய் - ஹூம் அப்பா மாதிரியா பேசறீங்க?..அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...கமிஷனர் மனைவியா ஒரு பொண்ணை காட்றீங்களே , வேலைக்காரி மாதிரி இருக்கா.. பாத்திரத்தேர்வுல கவனம் வேணும்..
எஸ்.ஏ. சந்திரசேகர் - ஹூம்.. எல்லாம் என் நேரம்.. அதை நீ சொல்றே.. ஒரே மாதிரி கேரக்டர்ல 19 படம் பண்ணுன நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றே... சரி படத்தோட வசனங்கள் அனல் கக்குமே.. அதைப்பற்றி எதுவுமே சொல்லலையே....
கோர்ட் சீனில் சீமான் அனல் கக்கும் வசனங்கள்
1, நம்ம தலைவருக்கு திருக்குறள் ஏன் பிடிக்கும் தெரியுமா?
அதுல அதிகாரம் இருக்கே..? ( பாவம் கலைஞர்)
காமத்துப்பால் கூட இருக்கு...
அது அவரோட தனிப்பட்ட விஷயம்...
2. நாட்டைக்காட்டிக்கொடுப்பதை விடக்கொடுமையானது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது.. ( ராசா... யுவர் அட்டென்ஷன் பிளீஸ்)
3. எல்லாம் தெரிஞ்சவன் வக்கீல்.. எதுவுமே தெரியாதவன் அமைச்சர்..
4. யுவர் ஆனர்.. என்னால இந்த குற்றவாளிக்கூண்டுல நிக்க முடியல... ஒரு சேர் குடுங்க ..
யுவர் ஆனர்.. இவருக்கு CHAIR குடுத்தா உங்களுக்கும் SHARE குடுக்க ட்ரை பண்ணுவாரு...
5. ஒரே ஏரியாவுல 86 சின்ன வீடு இருக்கற ஒரே தலைவர் அந்த மினிஸ்டர் தான்.. ஊர் கன்யா குமரி.. ( யாரப்பா அந்த மன்மத குஞ்சு?)
6. முட்டாப்பசங்க எல்லாம் ஓட்டுப்போட்டு அயோக்கியப்பசங்களை ஆள வைப்பதுக்குப்பேருதான் தேர்தல்னு பெரியார் சொல்லி இருக்காரு.. ( அது எங்களுக்கே தெரியும்.. நீ என்ன சொல்றே # ஆடியன்ஸ்)
7. இப்பவாவது விழிச்சுக்குங்க.. இப்பவும் மக்கள்ட்ட விழிப்புணர்வு வர்லைன்னா அப்புறம் அவங்களுக்கு விழிக்க விழிகளே இல்லாம போயிடும்.
எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... இந்தப்படம் எத்தனி நாள் ஓடும்?
விஜய் - படத்தோட மேக்கிங்க் ஸ்டைல் மகா மட்டமா இருந்தாலும் செகண்ட் ஆஃப்ல வர்ற சில வசனங்களுக்காக 30 நாட்கள் ஓடும்... அதுவும் பி செண்ட்டர்ல தான்.. ஏ செண்ட்டர்ல 20 நாள் தான்.. சி செண்ட்டர்ல ஒரு வாரம்..
எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி.. ஆனந்த விகடன் மார்க்?
விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை....
எஸ்.ஏ. சந்திரசேகர் - குமுதம் ரேங்க்கிங்க்..?
விஜய் - ஓக்கே என ரேங்க் போடனும். ஆனா அவங்க இப்போ டி எம் கே சப்போர்ட் என்பதால் விமர்சனம் போடறதே டவுட் தான்...
. ஈரோடு சண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. ( இது மட்டும் சி பி வாய்ஸ்)
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.