N

27.3.11

இஸ்லாமியர்களை ஜெ. ஏமாற்ற முடியாது: கலைஞர் (நடிக்கும் கலைஞர்)


அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமிய பெருமக்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

10 ஆண்டுகாலம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் இடஒதுக்கீடு செய்யவில்லை. 

இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சியில் தான் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனையும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து அதனை பரிசீலிப்போம் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, தேர்தலுக்காக சொல்வது யார்? உண்மையான அக்கறையோடு செயல்படுவது யார்? என்பதை இஸ்லாமிய பெருமக்கள் நன்றாகவே அறிவார்கள். 

அயோத்தியில் கரசேவையை ஆதரித்து தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பேசிய ஜெயலலிதா, ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வரும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது இயலாது என்று கூறினார்.

இப்படியெல்லாம் பேசியதை ஜெயலலிதா மறைத்துவிட்டு, தற்போது இடஒதுக்கீடு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் பிரச்சாத்தில் பேசினால் அதை முஸ்லீம்கள் நம்புவார்களா? இவ்வாறு கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.