
தன்மானம் உள்ளவர்கள் யாரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக்,
இலவசமாக கொடுக்க முடியாத பொருட்களையெல்லாம், கொடுக்கப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை சுயசிந்தனை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கையை யாரும் நம்பி ஏமாறாமல், மக்கள்
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்.
தன்மானம் உள்ளவர்கள் யாரும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார்கள். அதிமுக வெற்றி பெற்றால் சட்டசபையின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். வைகோவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க எங்களது கட்சி தயார். வரும் 29ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன் என்றார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.