மேலூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமி வீட்டில் அவர், சுய உதவிக் குழு பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக போலீசாருக்கு ஒருவர் போனில் புகார் கூறி உள்ளார்.
இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மாடசாமி, தேர்தல் கண்காணிப்பு குழு, பறக்கும் படை போலீசார் கொண்ட குழு அவரது வீட்டை முற்றுகையிட்டது. வீட்டில் அவரது மனைவி மட்டும் சமையல் செய்து கொண்டிருந்தார்.
சாமி எம்.எல்.ஏ., குறித்து விசாரித்தபோது, காலையில் இருந்து அவர் கொட்டாம்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.சோதனையில் எந்த பணமும் சிக்கவில்லை.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.