தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி திரும்பி இருக்கிறோம். எல்லா மாவட்டங்களிலும் பூத் சிலிப் வழங்கும் பணி இரண்டு மூன்று நாட்களில் முடிவடையும்.
மிண்ணணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிவடைந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவுக்கு முதல் நாள் அனுப்பி வைக்கப்படும்.
தபால் வாக்குக்கான 66,231 மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலகத்தில் அலுவலர்களுக்கான மூன்றாவது கட்ட பயிற்சி 2 நாட்களில் நடைபெறும்.
தேர்தலின் போது ஒருவரது வாக்கை வேறு ஒருவர் செலுத்தி இருந்தால், உரிய அடையாள அட்டையுடன் வரும் வாக்களருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். அவருக்கு வாக்குச் சீட்டும் வழங்கப்படும்.
10 ஆயிரம் வாக்குக் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமாராக்கள் மூலம் எடுக்கப்படும் படங்கள் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் கண்காணிக்கப்படும். கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் போட்டு கள்ள ஓட்டு போட்டது கண்டுபிடிக்கப்பட்டால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.