கேரளாவில், பள்ளிக்கூட மைதானத்தில் பிரதமரின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி மறுத்துள்ளது.
140 சட்டசபை தொகுதிகளை கொண்ட கேரளாவில், வருகிற 13-ந் தேதி, ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 9-ந் தேதி கேரளா செல்கிறார்.

அதற்காக, மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரினர். இப்பிரச்சினையை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கலெக்டர் கொண்டு சென்றார்.
அதை பரிசீலித்த தலைமை தேர்தல் கமிஷன், பள்ளி மைதானத்தில் பிரதமரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க மறுத்துள்ளது.
`தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, கல்வி நிறுவனங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி கிடையாது' என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
`தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, கல்வி நிறுவனங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி கிடையாது' என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.