
இதுகுறித்து கோவையில் இன்று நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறுகையில், "கடந்த ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட நலத்திட்டங்களை கூறி நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் பேசியது தமிழக மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த எழுச்சி காரணமாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய ராகுல் காந்தி இன்று மதியம் 1.30 மணி அளவில் கோவைக்கு வருகிறார். முதலில் அவர் ஈரோட்டில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
வரும் 9-ம் தேதி மாலை 5 மணி அளவில் கோவையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், குலாம்நபி ஆசாத் மற்றும் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள்," என்றார் தங்கபாலு.
இந்தப் பேட்டியின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநில அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.