N

6.4.11

மக்கள் தேவையை ஜெ. பூர்த்தி செய்வார்: விஜயகாந்த்


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராகி, மக்களுக்குத் தேவையானவைகளை நிச்சயம் செய்வார் என்றார் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உலகநாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்களுக்கு தேவையானவைகளை நிச்சயம் செய்வார். இதில் எந்த மாற்றமும் இல்லை.
நான் பிரச்சாரம் செய்வதை சிலர் மீடியாக்கள் எடிட்டிங் செய்து ஒளிபரப்பி வருகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவுடன் நான் கூட்டணி வைத்துள்ளதால் திமுக பயப்படுகிறது.
தேர்தல் கமிஷன் எல்லா கட்சிகளுக்கும் பொதுவாகத்தான் நடவடிக்கை எடுக்கிறது. இந்த நடவடிக்கையால் எங்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் ஒரு மத்திய அமைச்சரோ தன் மீது வழக்கு போட்டால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என்கிறார்.
நேற்றைய தினம் பஸ்சின் மேற்கூரையில் ரூ.5 கோடி பிடிப்பட்டு இருக்கிறது. இது கண்டிப்பாக உழைத்த பணமாக இருக்காது," என்றார் விஜயகாந்த்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.