சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கும், தேவையான 3,721 கன்ட்ரோல் யூனிட்களும், 5,428 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வினியோக மையங்களுக்கு நேற்று அனுப்பப்பட்டன.
கன்ட்ரோல் யூனிட் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ரிப்பேராகிவிட்டால், உடனே மாற்ற வசதியாக தேவைக்கு 20 சதவீதம் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளன.
16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், அண்ணாநகர், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், ஆகிய ஏழு தொகுதிகளில் அடங்கியுள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, இரண்டு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் என்ற வகையில் அனுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், ‘’அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் கொண்டு, ஓட்டுச் சீட்டு அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வரும் 8ம் தேதி அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வினியோக மையங்களில், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், சின்னத்துடன் கூடிய ஓட்டுச் சீட்டுகளை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிப்பர்.
16 தொகுதிகளிலும், அமைக்கப்பட்டுள்ள 264 மண்டல அலுவலர்கள், இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

12ம் தேதி எந்தெந்த ஓட்டுச் சாவடிக்கு, எந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்புவது என்பதை அறிந்து, குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் ஓட்டுப்பதிவிற்கு தேவையான சாதனங்களையும் அனுப்புவர்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஏழு சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரிக்கும், நான்கு சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரிக்கும், ஐந்து சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டு, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப்பட்ட அறைகளில் வைத்து, பூட்டி சீல் வைக்கப்படும்.
ஒவ்வொரு அறைக்கும் முன்பாக மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படும். அதோடு, சீல் வைக்கப்பட்ட அறைக்கு முன், வீடியோ கேமரா வைத்து கண்காணிக்கப்படும்.
ஓட்டுப்பதிவு முடிந்து, ஓட்டு எண்ணிக்கைக்கு, ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலையினால், முதல் முறையாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையை வீடியோ கேமரா மூலம், கண்காணிக்க வேண்டி உள்ளது’’ என்று கூறினார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.