N

6.4.11

தமிழர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்: ராகுல்


தமிழர்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன் என, ராகுல்காந்தி பேசினார். 

ஈரோடு மேற்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 

ஈரோடு மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஒரு இளைஞரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். தமிழக இளைஞர் காங்கிரஸ் நிறைவேற்றும் திட்டங்களை பார்த்து, மற்ற மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்புகள் அதை பின்பற்றுகின்றன. 16 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினராக இணைந்துள்ளனர். அதில் 10 பேர் சட்டசபைக்கு வேட்பாளர்களாக

போட்டியிடுகின்றனர். எதிர்காலத்தில் தமிழக அரசியலில் இளைஞர் காங்கிரஸ் முக்கிய இடம் வகிக்கும். 

எந்த அரசுக்கும் இல்லாத உறவு, மத்தியில் காங்கிரஸ் மாநிலத்தில் தி.மு.க., அரசுகள் இடையே உள்ளது. இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் அரசாக இனியும் இது அமையும். தமிழகத்துடனும், தமிழர்களுடனும் பின்னிப் பிணைந்த பாசமும், உறவும் என் குடும்பத்துக்கு உண்டு. இந்த பிணைப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழர்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன் என்றார்.


0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.