நாம் தமிழர் கட்சி தேர்தல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் சீமான் பேசினார்.
அவர், ‘’நாம் தமிழர் கட்சி ஏன் காங்கிரசை மட்டும் எதிர்க்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஏனென்றால் தமிழர்களை அழிக்க சிங்களர்களுக்கு ஆதரவு தரும் கட்சி. அதனால் தான் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் இருந்து கருவோடு அழிக்க நாம் தமிழர் கட்சி பாடுபடுகிறது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று காங்கிரசார் கூறுகின்றனர். அவ்வாறு கூற அவர்களுக்கு தகுதி இல்லை.
இலங்கையில் தமிழக பெண்களை மானபங்கப்படுத்தி தமிழர்களை படுகொலை செய்யும் சிங்கள ராணுவத்துக்கு காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும் ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றனர்.
கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொன்று வருகின்றனர். இதற்காக காங்கிரசார் யாராவது அனுதாபப்பட்டு இருப்பார்களா?
தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்து தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்திய சிங்கள ராணுவத்துக்கு காங்கிரஸ் அனைத்து உதவிகளையும் செய்தது. சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களை இந்தியர்கள் என்று யாரும் கூறுவதில்லை. தமிழக மீனவர்கள் என்று தான் கூறுகிறார்கள்.
இந்த பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மணலை அள்ளி கொள்ளையடிக்கின்றனர். ஆற்றில் மணலை அள்ளுவது மனிதர்களின் தோலை உரிப்பது போன்றதாகும். தோலை உரித்தால் மனிதன் செத்து விடுவான். அதேபோல் மணலை அள்ளினால் ஆற்று தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் ஆறு நஞ்சாகிவிடும். அந்த தண்ணீரை குடிக்கும் நாமும் நோய்வாய்ப்பட்டு செத்து விடுவோம்.
இதனால் தான் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மணல் அள்ள தடை விதித்துள்ளனர். நடக்க இருக்கும் தேர்தலில் தமிழர்கள் என்ன தீர்ப்பை எழுதப் போகிறார்கள் என்று உலகமே எதிர்பார்க்கிறது’’ என்று பேசினார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.