N

9.4.11

வடிவேலு பொய் பிரச்சாரம் செய்கிறார் : செந்தில்


மதுரை கிழக்கு அ.தி.மு.க., வேட்பாளர் தமிழரசனுக்கு ஆதரவாக ஒத்தக்கடை, ஆனையூர், அய்யர்பங்களாவில் பிரசார கூட்டங்களில் நடிகர் செந்தில் பேசினார்.

அவர்,   ‘’ விலை வாசி குறைய அ.தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். விஜயகாந்த் வேட்பாளரை தாக்கியதாக நடிகர் வடிவேலு பொய் பிரசாரம் செய்கிறார். 
தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்து, விஜயகாந்த்தை அவர் தாக்கி பேசுகிறார். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தமிழர்கள் கொல்லப்பட்ட போது, மத்திய அரசை கருணாநிதி தட்டி கேட்கவில்லை. உயிருக்கு ஆபத்து என்றால் ஜெயலலிதா தான் என கனிமொழி குற்றம் சாட்டுவது வேடிக்கையானது’’


 நடிகர் செந்தில் பேசி கொண்டிருந்த போது, அவ்வழியாக வாகனங்களில் சென்ற பள்ளி சிறுவர், சிறுமியர் அவருக்கு கைகளை காட்டின.

உற்சாகமுற்ற செந்தில், இதுகளுக்கும் ஓட்டு உரிமை கொடுத்திருக்கலாம். அம்மாவுக்கு ஓட்டுகளை அள்ளி தட்டிடுவாங்க. நீங்கள் எல்லாம் வீட்டிலேயே போய் அம்மா, அப்பா, பாட்டி, தாத்தாகிட்ட, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட சொல்லுங்க,'' என பேச, கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.