தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால் தேர்தல் ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால் தேர்தல் ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் மறு தேர்தல் நடத்த உத்தரவிட முடியும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை நடந்த சோதனையில் 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுப்போட பணம் வாங்கினாலும் கொடுத்தாலும் ஓராண்டு சிறை தண்டனை உறுதி. தேர்தல் தொடர்பாக இது வரை 61 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் 91 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 66,799 மின்னணு இயந்திரங்கள் தமிழக தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. 2,88,000 ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.