மத்திய அமைச்சர் கபில் சிபல் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காந்தியவாதியும் பிரபல சமூக சேவகருமான அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார்.
லோக்பால் மசோதாவால் எந்த பயனும் ஏற்படாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹசாரே, கபிலுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர் உடனடியாக கூட்டுக்குழுவில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், கபில் சிபல் ஏன் தேவையில்லாமல் அவரது நேரத்தையும் எங்கள் நேரத்தையும் விரயமாக்கி வருகிறார். நாட்டுக்காக அவர் வேறு ஏதேனும் சேவை செய்யலாம். லோக்பால் மசோதாவால் எந்த பயனும் ஏற்படாது என்று நம்பினால், நீங்கள் கூட்டுக்குழுவில் இருக்கக்கூடாது. ராஜிநாமா செய்துவிட்டு வேறு வேலையை பாருங்கள் என்று ஹசாரே பதில் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.