மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக, தனது, முதல் 100 நாள் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை இன்று கபில் சிபல் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்காக, சட்டப்பூர்வ நிபந்தனைகள் அடங்கிய தேசிய ஸ்பெக்ட்ரம் சட்டம் கொண்டுவரப்படும். இந்த சட்டத்தை உருவாக்குவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்படும். ஸ்பெக்ட்ரம்லைசென்சு பெற்ற நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரத்தை எப்படி பயன்படுத்துகின்றன என்று அவ்வப்போது ஆய்வு செய்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.
இந்த பணியை எந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இனிவரும் காலங்களில், ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை, 20 ஆண்டுகளுக்கு பதிலாக, 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.