N

12.4.11

கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு வந்தது ஆப்பு !!!

தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு அடையாள மை வைக்கப்படும். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் இந்த மை அழியாதது.


ஒருவர் வாக்களித்து விட்டார் என்பதை உறுதி செய்யவும், கள்ள ஓட்டை தடுக்கவும் இந்த மை முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த தேர்தல்களில் பல இடங்களில் மை அழிவதாக சர்ச்சை எழுந்தது. தற்போது அதில் இருந்த குறைகள் நீக்கப்பட்டு அழிக்கவே முடியாத மை தயாரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வார்னீஷ் பெயிண்ட் நிறுவனம் இந்த மையை விசேஷமாக தயாரித்துள்ளது.

இந்த மை வெளியில் எங்கும் விற்கப்படுவதில்லை. தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே இந்த மையை அந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. எனவே வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையில் கலப்படம் அல்லது போலி மை இடம் பெற வாய்ப்பே இல்லை.

5 மாநில தேர்தலுக்காக மைசூர் வார்னீஷ் நிறுவனம் பிரத்யேகமாக மை தயாரித்துள்ளது. அதில் ஒரு பகுதி தமிழ் நாட்டுக்கு வந்து விட்டது. இந்த மை நாளை தேர்தல் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்படும்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.