N

14.4.11

கள்ள ஓட்டு பதிவாகவில்லை: பிரவீண்குமார்

தேர்தலில் கள்ள ஓட்டு ஏதும் பதிவாகவில்லை என, தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் அறிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: 

இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அடையாள அட்டை வைத்திருக்கும் பலராலும் ஓட்டுப்போட முடியாமல் போய்விட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் பலமுறை நினைவூட்டினோம். அதற்குப் பிறகும் பெயர் இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்யாவிட்டால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இந்த தேர்தலில் கள்ள ஓட்டு ஏதும் பதிவாகவில்லை.

யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள்  49 ஓ' என்று எழுதி பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அந்த வகையில், எத்தனை பேர் அவ்வாறு கையெழுத்து போட்டுள்ளார்கள் என்பது இன்று  தெரிய வரும். 49 ஓ' பற்றி நாங்கள் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் சிலர் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாததற்கான படிவத்தை கேட்டிருக்கிறார்கள் என்றார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.