
அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான நடிகர் சரத்குமார் பேசுகையில்,
ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணி. இன்னும் 6 நாட்கள் இருக்கிறது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு வெற்றி பெற வேண்டும். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிலாறர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ள தெளிவாகி விட்டது. இதை எப்படி சரத்குமார் சொல்கிறார் என்றால், கடந்த 10 நாட்களாக தென் மாவட்டங்களில் தென்காசி வேட்பாளராக நின்கின்ற நான் சுற்றுப் பயணம் செய்கின்றபோது, அனைவரும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்லுகிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சமத்துவ மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னதுடன், ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தெரிவித்ததுடன், இரண்டு தொகுதிகளை ஒதுக்கினார்கள்.
வெளியே வந்தவுடன் உங்களுக்கு இரண்டு தொகுதிகள்தானா என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். திமுகவை அகற்ற வேண்டும் என்றுதான் கூட்டணி என்றும், சீட் எங்களுக்கு முக்கியமில்லை என்றும் நான் கூறினேன் என்றார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.