N

6.4.11

தமிழகம்1 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது: ஜெ.


அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.
அவர்,  ‘’மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து மற்றும் கடும் மின்வெட்டு போன்ற காரணங்களால் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறீர்கள்? தேச விரோத சக்திகளோடு கூட்டணி சேர்ந்து செயல்படும் கருணாநிதி தமிழகத்தை ரூ.1 லட்சம் கோடி கடனில் தத்தளிக்க வைத்திருக்கிறார்.

ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற பொன்னான வாய்ப்பளிக்கும் நாள்தான், வர இருக்கும் தேர்தல் நாள். பேராசைக்காரக் கூட்டம் தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருப்பதைத் தடுக்கும் நாளாக அந்த நாள் இருக்க வேண்டும்.

எத்தனை கோடி என்றே கணக்கிட முடியாத அளவுக்கு மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் கருணாநிதியின் குடும்பமும் ஒன்றாகிவிட்டது.
 தனது குடும்ப வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர்தான் கருணாநிதி.
தமிழகத்தில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். கருணாநிதியின் சூழ்ச்சியிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.
ஜனநாயக நாட்டில் தமிழகத்தைச் சுரண்டும் கும்பலை விரட்டியடிக்க தேர்தல் ஒன்றுதான் சிறந்த வழி என்பதால் வர இருக்கும் தேர்தல் நாளன்று அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்று பேசினார்.

நன்றி நக்கீரன்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.