N

6.4.11

பத்திரிக்கையாளர்களிடம் ஜெ. கொடுத்த சிடி!!


எப்ரல் 6,: சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே. செல்வத்தை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பனமரத்துப்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ’’கருணாநிதி, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவச மிக்சி, அல்லது கிரைண்டர் என அறிவித்துள்ளார். ஆனால் அம்மா அவர்களோ மிக்சி, கிரைண்டர், பேன் மூன்றும் இலவசம் என்று அறிவித்துள்ளார்.

இது தாய்மார்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டணி கட்சிகளை அழைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எனவும், ஆனால் அம்மா கூட்டணி கட்சியினரை அழைக்காமல் தன்னிச்சையாக வெளியிட்டார் என குறைகூறி வருகிறார்கள்.

ஆனால் அம்மா அவர்களோ திருச்சியில் அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து அவர்களிடம் ஒரு சி.டி. யை கொடுத்து இந்த சி.டி. யில் உள்ள எந்தவொரு நலத்திட்டத்தையாவது நான் நிறைவேற்ற வில்லை என்றால், இந்த சி.டி.யை நீங்கள் ஆதாரமாக கொண்டு என்னை கேள்வி கேட்கலாம் என்று கூறினார்.

இது போல் தேர்தல் அறிக்கை வெளியிட தைரியம் இருக்கிறதா? இதே போல் விஜயகாந்த்தை வடிவேல் தரக்குறைவாக பேசி வருகிறார். சின்னகவுண்டர் படத்தில் விஜயகாந்த்துக்கு குடை பிடித்த வடிவேலு அப்போது இருந்த நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும். விஜயகாந்த்தை தரக்குறைவாக பேசும் தகுதி வடிவேலுக்கு இல்லை’’ என்று பேசினார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.