N

6.4.11

விஜயகாந்த்துக்கு வடிவேலு சவால்!!!!!


ஜெயலலிதா முன்பு தான் இன்னொரு எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர் என்று கூறமுடியுமா என்று விஜயகாந்த்துக்கு வடிவேலு சவால் விட்டுள்ளார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நத்தம் தொகுதியில் பிரச்சாரம் செய்து பேசிய அவர்,
தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூறிவரும் விஜயகாந்த், ஜெயலலிதா முன்னிலையில் தான் இன்னொரு எம்ஜிஆர் என்று கூறமுடியுமா? நீ ஒரு சரியான ஆம்பிளையா இருந்தா, இன்று பேசப்போகிற மேடையில் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லு. அப்புறம் அந்த அம்மாதான் முதல் அமைச்சர் என்று சொன்ன. எப்பவுமே அந்த அம்மாதான் முதல் அமைச்சர் என்று சொல்லு.
சொல்ல மாட்ட. ஏன் என்றால் அதிமுகவை ஆட்டைய போட நீ நினைக்கிற. உங்க மனைவி என்ன நினைக்கிறார் உன்னுடைய நாக்கு முக்க கட்சியை ஆட்டைய போட நினைக்கிறார்.
கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி வரும் விஜயகாந்த்தை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.