வாஷிங்டன் : லிபிய அதிபர் முவாம்பர் கடாபி பதவி விலகுவது என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். லிபிய நிலவரம் குறித்து வாஷிங்டனில் அதிபர் ஒபாமா பேசுகையில், துனிசியா, எகிப்தை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடான லிபியாவிலும் சர்வாதிகார ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், லிபியாவில் அதிபர் கடாபி ராணுவத்தின் துணையுடன் அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை நடத்தி வருகிறார். இந்த தாக்குதலை கடாபி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலக வேண்டும். கடாபி பதவி விலகுவது தவிர்க்க முடியாத ஒன்று என ஒபாமா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.