N

2.7.11

ரீசார்ஜ் செய்து புகைக்கலாம் : வந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்!

புதுடெல்லி : புகை பிடிப்ப வர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகை யில் இ-சிகரெட் விற்பனைக்கு வந்துள் ளது. குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஜாய் 510’ என்ற அதன் விலை 1,650 ரூபாய். கடந்த ஆண்டில் ரிலீசான ஹாலி வுட் படம் ‘தி டூரிஸ்ட்’. ஜான் டெப் அதில் ஹீரோ. ஏஞ்சலினா ஜூலி ஹீரோயின். ரயிலில் எதிரெதிரே அமர்ந்து பயணம் செய்யும் காட்சி. அதில் சிகரெட்டை இழுத்து புகை விட்டுக் கொண்டே இருப்பார் டெப். முகத்தில் புகை படர்ந்தாலும் அமைதி காப்பார் ஏஞ்சலினா.

‘‘நான் புகை பிடிப்பது உன்னை பாதிக்கவில்லையா... என்று கேட்கும் டெப், இது எலக்டிரானிக் சிகரெட், பாதிக்காது’’ என்பார். ஏஞ்சலினா ஆச்சரியமாக பார்க்க, ‘‘நம்பவில்லையா..’’ என்றபடி அதன் தீ நாக்கை கையில் தேய்த்தபடி... இது எல்இடி லைட் என்று கூறுவார். ஆம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட இ-சிகரெட், இந்தி யாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. குர்கானை சேர்ந்த இணைய தள நிறுவனமான விண்ட்பைட் டாட் இன் இதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து ‘ஜாய் 510’ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பவுண்டன் பேனா வடிவில் இருக்கும் அதில், அழுத்தி இங்க் நிரப்ப இருக்கும் பகுதியும் உண்டு. பேனாவில் இங்க், இ&சிகரெட்டில் நிகோடின் திரவம். ஆம். இந்த நிகோடின்தான் சிகரெட் பிடிப்பவர்களை திருப்திபடுத்துகிறது. திரவத்தை சூடாக்க பேட்டரி, முனையில் எல்இடி விளக்கு. ‘ஜாய் 510’ சிகரெட்டின் ஒரு விசையை அழுத்தினால் பேட்டரி இயங்கி திரவம் சூடாகி புகை வரும். சிகரெட் முனையில் தீ நாக்கு போலவே விளக்கு எரியும்.

பிறகு வாயில் வைத்து இழுத்து வட்ட வட்டமாக புகை விடலாம். அந்த புகையால் யாருக்கும் பகையில்லை. இந்த இ&சிகரெட் சிலமுறை பயன்படுத்தி தூக்கி எறிவது ரூ. 300, நீண்ட காலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது ரூ. 1,650 என 2 விலையில் கிடைக்கிறது. சிகரெட் பழக்கத்தை விட முடியாதவர்கள் இதற்கு மாறலாம், கேன்சரின் ஆபத்து இல்லாமல்!

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.