N

31.8.11

ரம்ஜான் வாழ்த்து! ஆளுநர், முதல்வர் வாழ்த்து


சென்னை: தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா விடுத்துள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஈதுல்-பித்ர் எனும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகையின் மூலம் ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம், மற்றும் அமைதி, மேலோங்கட்டும் என்று கூறியிருக்கிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து வருமாறு:-
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மனம் மகிழ்ந்து கொண்டாடும் எனது அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் பெருநாள், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சீர்மிகுந்த ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமை ஆக்கியதன் நோக்கம், மனிதரை நல்லவராக விளங்கச் செய்வதே ஆகும்.
நோன்பு நோற்கும் இறை நம்பிக்கையாளர்களுக்காக அவர்கள் நோற்ற நோன்பும், திருக்குரானும் இறைவனிடம் பரிந்துரை செய்யும் என்று அகிலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது மொழிந்துள்ளார்.
மனிதகுலத்திற்கு வழிகாட்டும் நபிகள் நாயகத் தின் மணிமொழியை தலைமேல் ஏற்று, உடலையும், உள்ளத்தையும் ஒருமுகப்படுத்தி ஒரு மாதக் காலம் நோன்பிருந்து சமுதாயத்தில் உள்ள ஏழைகள் மற்றும் தேவையுள்ளோர் மீது அனுதாபமும், பரிவும் செலுத்தி இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் கடமையை நிறைவாகச் செய்து மகிழ்ந்திருக்கும் இந்த இனிய வேளையில் அன்பு ஓங்குக, அறம் தழைத்திடுக!
சமாதானம் நிலவிடுக, சகோதரத்துவம் வளர்ந்திடுக! என்று கூறி என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த் துக்களை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியுடன் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.