N

30.8.11

ஈகை பெருநாள் வாழ்த்துகள்!


இதயங்கள் மலரட்டும்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
சாந்தி மார்க்கமான இஸ்லாம் ஏந்தி நிற்கும் இரு பெருநாட்களில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் ஈகை நன்னாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதகுலம் நேர்வழி பெற இறைவேதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தில், அம்மாதம் முழுவதும் நோன்பிருந்து இறை உணர்வில் திளைத்து ஏழைகளின் பசி உணர்ந்து, இறைவனை வணங்கி, ஏழைகளுக்கு வாரி வழங்கி, பிறை கண்டு ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், நாட்டோர் நலம் பெறவும், நல்லிணக்கம் மலர்ந்திடவும் விழைவோம்.
நம்நாட்டில் அடிப்படைத் தேவைகளே நிறைவேறாமல் ஏராளமானோர் வாழும் நிலையில் அவர்களின் வாட்டம் போக்க, வறுமையின் அவலம் நீக்க அனைவரும் அணி திரள்வோம். இறைவனை வணங்கும் மனதையும், இல்லாதோர்க்கு வழங்கும் குணத்தையும் மக்கள் மத்தியில் ஓங்கச் செய்வோம்.

மனிதநேயத்தை மங்க வைக்கும் பொறாமை, வஞ்சகம், பகையுணச்சி போன்ற தீய செயல்களிலிருந்து மனிதகுலம் விடுபட்டு, பொறுமை, ஈகை, அன்பு, சகோதரத்துவம் ஆகிய இறைவிருப்பமுள்ள பண்புகளை எல்லோரும் பெற பிரார்த்திப்போம்.

அன்புடன்
(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.