N

7.1.12

முல்லைப் பெரியாறு அணையைக்காக 2,500 கைதிகள் உண்ணாவிரதம்


முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டதாகவும், இதனால் அணை உடைந்துவிடும் ஆபத்து இருப்பதாகவும், கேரள அரசு தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறது. 

ஆனால், தற்போது அணை புதிய அணையைப் போன்று பலமாக இருக்கிறது. இந்த அணை உடையக் கூடிய வாய்ப்பே இல்லை. எனவே இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கூறிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் உள்ள குண்டுவெடிப்பு கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என 2,500 கைதிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டும் தமிழ்நாட்டுக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இன்று காலை 8 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.